கொல்லப்பட்ட தீவிரவாதியை தியாகி என பாகிஸ்தான் அறிவிப்பு!

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், இளம் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு, அவரை, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தியாகி என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பிரிவினைவாதத் தலைவர் புர்ஹான் வானி, இந்திய காஷ்மீரிகள் பலருக்கு பிரபலமானவர். அவரது மரணத்தை அடுத்து, இளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல நாட்கள் ஏற்பட்ட மோதலில், முப்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமையன்று இந்திய அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை மேலும் கடுமையாக்கினார்கள். இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தை ஒடுக்க, மொபைல் தொலைபேசி இணைப்புக்களைத் துண்டித்தனர்.
Related posts:
சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!
கலைஞர் கருணாநிதியின் பூதவுடல் மெரினா கடற்கரையில் அடக்கம்!
காலக்கெடுவை நிராகரித்தது நைஜர் இராணுவம்!
|
|