கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்க நாள் அதிகரிப்பு: அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற தற்காலிக தடை – அதிபர் டிரம்ப்பு!

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 7 இலட்சத்து 92 ஆயிரத்து 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 42,517 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்க குடிமகன்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன் என தமது ட்விட்டர் பதிவின் ஊடாக டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க அரசு ஆலோசனை!
வீடு இடிந்து வீழ்ந்து 4 குழந்தைகள் உயிரிழப்பு: டெல்லியில் சம்பவம்!
இலங்கையில் வருடாந்தம் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு ப...
|
|