இலங்கையில் வருடாந்தம் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிப்பு – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரவின் சமூக வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Thursday, February 15th, 2024

சர்வதேச சிறுவர் புற்றுநோய் தடுப்பு தினம் இன்றாகும். சிறுவர்களிடையே ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 15 ஆம் திகதி சர்வதேச சிறுவர் புற்றுநோய் தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

2030 ஆண்டுக்குள் 60 சதவீதமான சிறுவர்களை புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தேவையான சிகிச்சையளிப்போம் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.

ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 4,0 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான புற்றுநோய்கள் காணப்பட்டாலும் சிறுவர்கள் மத்தியில் லுகேமியா எனும் புற்றுநோய் அதிகமாக காணப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் நாளாந்தம் 1,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தாலும், பெற்றோர்கள் மத்தியில் போதுமானளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சிகிச்சையின்றி அதிகளவான சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்.

இந்தநிலையில் இலங்கையில் வருடாந்தம் 2 முதல் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரவின் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அரச வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு – நிதி அமைச்சு அதிரடி நடவடிக்...
13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின்...
கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு - இலங்கை மனித உரிமைகள் ஆ...