இலங்கை மற்றும் உலக தமிழர் 2023 இல் கொண்டாடும் முதல் விழா – சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Sunday, January 15th, 2023

இலங்கை தமிழர்களும் உள்ளிட்ட உலகளாவிய தமிழ் மக்கள் உற்சாகத்துடன் ஒன்றுசேர்த்து கொண்டாடும் 2023 ஆம் ஆண்டின் முதலாவது விழா தைப்பொங்கல் விழாவாகும். மலரும் தைப்பொங்கல் தினம் வளமானதும் மகிழ்ச்சியானதுமான ஆன்மீக திருப்தியுடன் கூடிய விழாவாக அமைய வேண்டுமென வாழ்த்துக்களை கூற விரும்புகின்றேன் என சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்,

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில் –

விளைச்சலை விருத்திசெய்வதற்கு கதிரவன் செய்த பணிகளுக்கும், அதனை மேலும் வளமாக்குவதற்கான மழையின் பங்களிப்புக்கும்,  பசுக்களுக்கும் நன்றி செலுத்துவதும் இந்த தைப்பொங்கல் விழாவின் பிரதான நோக்கமாகும்.

கடவுள் மற்றும் இயற்கையுடன் எப்பொழுதும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழ் மக்கள் பொருளாதார நெருக்கடி, நோய் நொடிகள் போன்ற வாழ்க்கையில் முகங்கொடுக்கும் கஷ்ட – துன்பங்களுக்கு மத்தியில்  மன நிறைவான மகிழ்ச்சியில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். நன்றிக்கடன் தெரிவிப்பது தமது வாழ்க்கையுடன் இணைந்த கௌவரமான பொறுப்பு என்ற கருதி அவர்கள் தமது விளைநிலங்களிலிருந்து பெரும் புதிய அறுவடைகளை தாம் நம்பிக்கை வைத்துள்ள சூரிய பகவான் உள்ளிட்ட ஏனைய கடவுள்களுக்கு பூஜை செய்கின்றனர்.

தமிழ் மக்களின் பாரம்பரிய நாட்காட்டிக்கு அமைய ஜனவரி மாதம் தை மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இது மிகவும் அலங்காரமான கலாசார நிகழ்வுகளைக் கொண்ட விழாவாகும். தமது இல்லத்தின் தூய்மையை பிரதான விடயமாகக் கொண்ட தமிழ் பெண்களின் அழகான கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட முற்றம் இந்த பொங்கல் விழாவில் மறக்கமுடியாத, அலங்காரமான அடையாளமாகும்.

தைப்பொங்கல் விழா இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும் கொண்டுவரும் பல முக்கிய செய்திகள்  உள்ளன. என்னைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டில் எம்மால் நடந்த தவறுகளிலிருந்து மீண்டு, புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புக்களுடன் அடைவது மிகவும் முக்கியமான ஒரு வழக்கமாகும். அது தைப்பொங்கல் விழாவுக்கு முன்னர் பழைய ஆண்டில் போகிப்பொங்கல் தினத்தில் எமது ஹிந்து மக்கள் கொண்டாடும் இறுதி வழக்கமாகும்.

2023 ஆம் ஆண்டும் மலர்ந்த தைப்பொங்கல் இன வேறுபாடுகள் இன்றி, பொங்கலை முழு நாட்டுக்கும் பகிரக்கூடிய கருணையுள்ளம் ஏற்படும், ஒத்துழைப்பு, சமத்துவம், செழிப்பு மற்றும் நோய்நொடிகளின் ஆபத்துக்களிலிருந்து மீண்ட நாளைய தினத்தின் தொடக்கமாகட்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: