மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை!
Saturday, October 1st, 2016
மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு கடந்த புதன்கிழமை(28) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இளைஞரிடமிருந்து மதுப் பரிசோதனையின் போது பெறப்பட்ட சுவாசப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த குற்றச் சாட்டை இளைஞர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றத்தினால் இரண்டு மாதக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், சந்தேகநபரை 7500 ரூபா அபராதமாகச் செலுத்துமாறும், அவருடைய சாரதி அனுமதிப் பாத்திரத்தைத் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் அவர் மேலும் உத்தரவிட்டார்.

Related posts:
ஈ.பி.ஆர்.எல்.எப் நாபாஅணியினரின் தேசிய மகாநாட்டை வரவேற்கின்றோம்.
பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு இந்த வருடம் முதல் நடைமுறை - கல்வி அமைச்ச...
உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது - அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை...
|
|
|


