கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியது – தீர்வு காணமுடியாது உலக நாடுகள் பரிதவிப்பு!
Wednesday, April 15th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி மனித உயிர்களை பலியெடுத்தும் வருகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் இதுவரை 20 இலட்சத்து 65 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
அத்துடன் உலகளவில் குறித்த கொரோனா பாதிப்பால் இதுவரை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 754 பேர் உயிரிழந்துள்ளதுள்ள நிலையில் இதுவரை 484,594 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதுசமயம் இந்த கொரோனா தொற்றின் காரணமாக அதிகபட்சமாக அமெரிக்காவில் 612,246 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 26,064 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 11,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,306 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
Related posts:
|
|
|


