கொரோனா தொற்றால் இதுவரை 4 இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!
Wednesday, June 17th, 2020
உலகில் ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றால் இதுவரை 82 இலட்சத்து 64 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்நோயின் தாக்கத்தால் இதுவரை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 135 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 43 இலட்சத்து 21 ஆயிரத்து 498 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், உலக அளவில் தொற்றுத்து பாதிக்கு 3,255 பேர் பலியாகியுள்ளனர், இது முந்தைய நாளில் 3,911 ஆக இருந்தது, பலி எண்ணிக்கை 446,135 ஆக இருந்தது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 3,496,767 பேர்களில் 54,594 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு இதுவரை 22,08,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,19,132 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர், 9,03,041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது
Related posts:
|
|
|


