கேமரூன் நாட்டில் மனிதவெடிகுண்டு தாக்குதல்: மாணவி சிக்கினார்!

2014ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிபோக் நகரில் போகோஹரம் தீவிரவாதிகள் ஒரு பாடசாலையில் புகுந்து 270 மாணவிகளை கடத்திச் சென்றனர். இவர்களில் 50 பேர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர். மற்றவர்கள் இன்னும் தீவிரவாதிகளின் பிடியில்தான் உள்ளனர். இந்த மாணவிகளில் ஒருவரை தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக பயன்படுத்த திட்டமிட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அண்மையில் நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூன் தலைநகர் யோன்டேயில் சந்தேகத்தின்பேரில் ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து ஏராளமான வெடிமருந்து பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் ஒருவர் என்பதும் அவரை தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக பயன்படுத்த மூளைச் சலவை செய்து இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவியை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி கேமரூன் அரசு நைஜீரியாவுக்கு தகவல் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அவர் தங்களது மகள்தானா என்பதை உறுதி செய்ய அந்த மாணவியின் பெற்றோரை கேமரூன் நாட்டுக்கு நைஜீரியா அரசாங்கம் அனுப்பி வைத்து இருக்கிறது.
Related posts:
|
|