மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய அமெரிக்கா!

Friday, May 26th, 2017

அமெரிக்காவின் யுத்தக் கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனாவினால் அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை கடந்த சென்றுள்ளது.

யு.எஸ்.எஸ். டெவேய் என்ற இந்த கப்பல், குறித்த தீவில் இருந்து 12 கடல்மைல்கள் தொலைவில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சீனக் கடல் மற்றும் அதில் உள்ள தீவுகள் அனைத்துக்கும் சீனா உரிமை கோரும் அதேநேரம், அந்த பிராந்தியத்தில் உள்ள ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் அவற்றுக்கு உரிமை கோருகின்றன

இந்த விடயத்தில் எந்த தரப்புக்கும் ஆதரவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ள போதும், எந்த சர்வதேச கடற்பரப்பிலும் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்க உரிமை இருப்பதாக தெரிவித்து வருகிறது இந்த உரிமையை முன்வைத்தே கடந்த காலங்களில் அமெரிக்கா தங்களின் விமானங்களையும் தென்சீனக்கடலுக்கு மேலாக பறக்கவிட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: