இத்தாலிக் கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி!

Saturday, November 5th, 2016

லிபியாவிலிருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகள் இத்தாலி கடலில் மூழ்கியதில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இத்தாலிக்கான ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

முதல் படகில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்தப் படகு நேற்று முன்தினம் இத்தாலியின் லம்பேடுசா தீவை நெருங்கும்போது படகு கடலில் மூழ்கியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 39 பேர் மட்டுமே தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றுக் காலை மேலும் ஒரு படகு இத்தாலி கடற்பரப்பில் கவிழ்ந்துள்ளது. இதில் 140 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். இந்த படகில் பயணித்த இரண்டு பேர் மட்டுமே தப்பித்துள்ளனர் என்றும் இத்தாலிக்கான ஐ.நா. அகதிகளுக்கான ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.

வடஆபிரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர் காரணமாகவும் துருக்கி, சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் சண்டை காரணமாகவும் லிபியா வந்தடைகிறார்கள்.

அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணத்தில் அவர்களை ஆட்கடத்தல்காரர்கள் படகுகளில் ஏற்றிச் செல்கிறார்கள். வட ஆபிரிக்காவில் உள்ள லிபியாவின் வடக்கு எல்லையாக மத்திய தரைக்கடல் உள்ளது.ஐரோப்பிய கண்டத்தில் மத்திய தரைக்கடல் எல்லையாக இத்தாலி உள்ளது. அவர்கள் கடல்வழியாக இத்தாலி செல்கிறார்கள். இவ்வாறு ஒரே படகில் ஏராளமான அகதிகள் செல்லும்போது அடிக்கடி நடுக்கடலில் படகு மூழ்கி ஏற்படும் விபத்துகளில் நூற்றுக்கணக்காக அகதிகள் ஒரே நேரத்தில் பலியாகும் சோகம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

libiya_04112016_kaa_cmy

Related posts: