அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – கடும் போட்டியில் ஜோ பைடன் – ட்ரம்ப்!

Wednesday, November 4th, 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி வேட்பாளர்களில் நேரடி போட்டியில் இருந்த ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் பெற்ற வாக்குகள் மற்றும் பிரதிநிதிகளின் ஆதரவு குறித்த தகவல்கள் வெளியா வண்ணம் உள்ளன.
அமெரிக்க பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை.
தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 238 இடங்களையும், ட்ரம்ப் 212 இடங்கiளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் பிரதிநிதிகள் அதிகம் உள்ள முக்கியமான மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிக்கின்றார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Related posts: