கூகுள் நிறுவனத்துக்கு 4.3 பில்லியன் யூரோ அபராதம் !

Saturday, July 21st, 2018

இணையத்தளத்தில் பொருட்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்தமைக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 4.3 பில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது தொலைபேசி இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை தொலைபேசி சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்திக்க ஐரோப்பிய யூனியனின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக கூகுள் நிறுவனம் தனது இணையத்தள சேவையில் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஏனைய நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதான குற்றச்சாட்டில் கடந்த 2017 இல் ஏற்கனவே ரூ.19 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அது தொடர்பாக மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தி கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூகுள் சார்பில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.

Related posts: