ரஷ்ய பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி!

Wednesday, April 17th, 2019

இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம் கீழ்சபையில் நிறைவேற்றம்

பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி, புதிய சட்டமொன்றை ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ்சபை நிறைவேற்றியுள்ளது.

கீழ்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில், அரைவாசிக்கும் மேலானோர் அதனை ஆதரித்து வாக்களித்ததாக கம்யூனிஸ்ட் கட்சியின் அலெக்ஸி குரின்னி (Aleksei Kurinny) தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமது சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாக்களிப்பதனூடாக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்தியதாக சேர்ஜி இவானோவ் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை பிரதி சபாநாயகர் அலெக்ஸாண்டர் ஷுக்கோவ் (Alexander Zhukov) நிராகரித்துள்ளார்.

Related posts: