குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விஸா கிடைகப்பெறாது – பிரித்தானிய அரசாங்கம்!

Wednesday, February 19th, 2020

பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ், குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விஸா கிடைகப்பெறாது என பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடனான பிரெக்ஸிட்டின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிம் அல்லாத பிரஜைகள் சமமாக நடத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிக்கு அமைய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறைமையை பிரித்தானியா விரும்புவதாக உள்துறை அலுவலக செயலாளர் பிரிடி பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ், இஙகிலாந்து விஜயம் மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள், ஆங்கில மொழி ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட அனுசரணையாளருடன், தொழில் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை பூர்;த்தி செய்தால், அவர்களுக்கு 50 புள்ளிகள் வழங்கப்படும் என பிரித்தானிய உள்துறை அலுவலக செயலாளர் பிரிடி பட்டேல் Pசவைi Pயவநட தெரிவித்துள்ளார்.

Related posts: