கிரீன்கார்ட் விசா தொடர்பில் அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பு!
Thursday, October 4th, 2018
2020ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் கிரீன்காட் விசா லொத்தர் விண்ணப்பங்கள் இன்று இரவு முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இன்று இரவு 9.30 மணியில் இருந்து இணைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விசா லொத்தர் மூலம் தெரிவுசெய்யப்படுபவர்கள், அமரிக்காவின் சட்டரீதியான வதிவிட அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
இந்தநிலையில் போலியான இணையத்தளங்களின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பாமல், www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை பூர்த்திசெய்யுமாறு அமரிக்க தூதரகம் கோரியுள்ளது.
அறிவுறுத்தல்களுக்காக விண்ணப்பத்தாரிகள், www.ow.ly/SQtGb என்ற இணையத்தளத்தை பார்வையிடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ட்ரம்பின் அறக்கட்டளைக்கு தடை!
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எகிப்தில் 12 படையினர் பலி!
அமெரிக்க ஜனாதிதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!
|
|
|


