கியூபாவில் 3″ஜி” இணைய சேவை!

கியூபா, தனது மக்களுக்கு 3″ஜி” இணைய சேவையை வழங்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை கியூபாவில் அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்த சேவையை அனைவரும் பெற முடியாத அளவுக்கு அதன் கட்டணம் உள்ளதுடன், 600 எம்.பி டேட்டாவின் விலை 7 டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கணக்கில் மதிப்பிட்டால் அதன் விலை 490 ரூபாய். மக்கள் இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவே இத்தனை நாட்களாக 3ஜி சேவை அளிக்காமல் அந்நாடு இருந்தது.
அத்துடன் ஐந்து ஆண்டுகள் முன்பு வரை வெளிநாட்டு விடுதிகள் மற்றும் அரசால் நடத்தப்படும் மன்றங்களில் மட்டுமே இணைய சேவை வழங்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அமெரிக்க மாலுமிக்கு சிறை!
பாலர் பாடசாலை அருகே தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- இருவர் பலி!
கென்யாவில் பேருந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு!
|
|