அமெரிக்க மாலுமிக்கு சிறை!
Saturday, July 16th, 2016
ஜப்பானின் ஒக்கினாவா தீவில் ஜப்பானியப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அமெரிக்க மாலுமி ஒருவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் காஸ்டெல்லானோஸ் பணிபுரிந்த தீவிலுள்ள ஹோட்டலின் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரோடு பாலியல் வல்லுறவு கொண்டார்.அமெரிக்க இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் ஒகினாவா தீவில் அமெரிக்க படைப்பிரிவுகள் இருப்பதற்கு எதிரான கோபத்தை உள்ளூர் மக்களிடம் எழுப்பியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இன்னொரு ஜப்பானியப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பேர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
Related posts:
100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் !
நேட்டோ அமைப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை!
மாணவர்களுக்கு ஸ்மார்ட் சீருடை அறிமுகம்!
|
|
|


