காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தமானது -சுஷ்மா அதிரடி!

Saturday, April 8th, 2017

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தமானது என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்றையதினம் இடம்பெற்ற விவாதத்தின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே வெளியுறவு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித் – பல்திஸ்தான் பகுதிகளை தனது நாட்டின் 5 ஆவது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவது கண்டனத்திற்கு உரியது என்று குறிப்பிட்ட அவர்,

அப்பகுதி உட்பட ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கே சொந்தம் எனவும் இதற்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிவினையின் போது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கில்ஜித் -பல்திஸ்தான் இருந்த போதும், பிரித்தானிய முகவராக பொறுப்பில் இருந்த அதிகாரிகள்,

பாகிஸ்தான் இராணுவம் அப்பகுதியில் இருப்பதற்கு அனுமதியளித்ததாகவும் அதன் காரணமாகவே 1947 அம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அப்பகுதியை ஆக்ரமித்துள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் குற்றம்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: