பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஹெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை!

Friday, July 6th, 2018

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகளும், அவரின் மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பனாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஊழல் செய்த பணத்தில் லண்டனின் அவன்பீல்டு என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது, நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் நவாஸ் லண்டனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: