காஷ்மிர் ஆர்ப்பாடத்தில் மேலும் மூவர் கொல்லப்பட்டனர்!

Saturday, August 6th, 2016

பிரச்சினைக்குரிய காஷ்மிர் பிராந்த்தியத்தில், இந்திய பாதுகாப்புப் படைகளால் மேலும் மூவர் கொல்லப்பட்ட நிலையில், ஜூலை மாத ஆரம்பத்தில், உள்ளூர் பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்ததான அசாதாரண நிலையில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமைப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து, பொலிஸாருடனும் துணப் படைகளோடும் சனக் கூட்டம் மோதியதில், ஸ்ரீநகரின் மேற்கில், இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும் வடக்கில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மிரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கை அதிகாரிகள் நீட்டித்துள்ள போதும், ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் அதை மீறி, 28ஆவது நாளாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இதேவேளை, ஒரு நாள் வரை நீடித்த மோதல்களில், சில பொலிஸ் அதிகாரிகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காஷ்மிருக்கு சுதந்திரத்தைக் கோரும் அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கக் கோரும் ஹிஸ்புல் முஜாஹிதின் பிரிவினைக் குழுவின் பிரபலமான தளபதியான 22 வயதான புர்ஹன் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே வீதியோர வன்முறைகள் ஆரம்பிதிருந்ததுடன், இதுவரையில் மோதல்களில், 5,000க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related posts: