காவிரி விவகாரம்: மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் குறித்த தீர்ப்பு இன்று?

Friday, May 18th, 2018

காவிரி பிரச்சினையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு உயர்நீதிமன்றில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையின் நகல்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கி, அவற்றின் கருத்துக்களை கேட்டறியுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு 10 பேர் கொண்ட ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது.

இதேவேளை, கர்நாடக அரசாங்கம் தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உயர்நீதிமன்றின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயற்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: