காவல்துறை தலைவரை கொன்ற 7 பேருக்கு எகிப்து நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு!
Sunday, September 25th, 2016
எகிப்தில் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கொன்றதற்காக ஏழு நபர்களை தூக்கிலிடுமாறு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
2013 ஆம் அண்டில், கெய்ரோவுக்கு அருகில் உள்ள கெர்டாஸா என்ற கிராமத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது, காவல்துறை தலைவர் நபில் ஃபராக் சுட்டு கொல்லப்பட்டார்.எகிப்து அதிபராக முகமது மோர்சி பதவியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து எழுந்த தீவிர அரசியல் பதட்டத்தின் போது இந்த கொலை சம்பவம் நடந்தது.
மோர்சி ஆதரவாளர்களின் கோட்டையாக கெர்டாஸா இருந்தது.நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏழு பேரும் மேல்முறையீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.

Related posts:
விரைவாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்!
முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்த ரோபோ !
பிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த சூறாவளி - 16 பேர் பலி!
|
|
|


