காபூலில் தற்கொலைக் தாக்குதல்: 40 பேர் பலி!
Thursday, June 30th, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காபூலில் பொலிஸ் வாகனத் தொடரணியை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பயிற்சி இராணுவத்தினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியத் தூதரகத்தில் பணியாற்றிய நேபாள நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
Related posts:
முறையாக அனுமதி பெறாமையால் 7 மில்லியன் டாலர் கை நழுவிப் போன சோகம்!
அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ்!
மோசடி செய்யும இலங்கை மாணவர் போலி விவரங்கள்அனுப்புகின்றனர் - நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகம்...
|
|
|


