முறையாக அனுமதி பெறாமையால் 7 மில்லியன் டாலர் கை நழுவிப் போன சோகம்!

Sunday, August 21st, 2016

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அதில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர் அந்த சோதனையில் தன்னுடைய பங்கு குறித்து எழுதிய புத்தகத்தின் மூலம் கிடைத்த சுமார் 7 மில்லியர் டாலர் வருவாயை விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தப் புத்தகம் வெளியான 2012இல் அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனிடமிருந்து முறையான அனுமதி பெறவில்லை என்பதே அதற்குக் காரணம். மார்க் ஓவென் என்ற புனை பெயரில் புத்தகம் எழுதிய மாட் பிஸ்ஸோனெட், தான் எழுதிய ‘நோ ஈஸி டே’ என்ற புத்தகத்தின் மூலம் கிடைத்த அனைத்து இலாபங்கள் மற்றும் ராயல்டி தொகைகளை விட்டுக் கொடுக்க உள்ளார்.

இதில், திரைப்பட உரிமைகள் மற்றும் அவர் பேசியதற்கான கட்டணங்கள் உள்ளிட்டைவையும் அடங்கும். பிஸ்ஸோனெட் அமெரிக்க கடற்படையில் சீல் அதிகாரியாக பணிபுரிந்த போது ஒரு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த புத்தகத்தை வெளியிடுவதற்குமுன் ஆய்வுக்காக சமப்ர்பிக்கத் தவறியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வருவாயை திருப்பி அளிப்பதற்காக, அமெரிக்க அரசானது அவர் மீது தொடுத்துள்ள மற்ற வழக்குகளை கைவிட்டுள்ளது.

160502171740_osama_bin_laden_512x288_afp_nocredit

130831111454_no_easy_day_512x288_bbc_nocredit

Related posts: