கனடா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!
Friday, February 17th, 2017
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக விளங்கிய மேற்படி சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த வாக்கெடுப்பு நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது, 408 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 254 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இந்நிலையில், எட்டு வருடங்களின் பின்னர் பெரும்பான்மையாக 154 வாக்குகளை பெற்று ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரங்களை அடிமட்டத்திற்கு தள்ளும் என்பதுடன் பன்னாட்டு நிறுவனங்களின் பொதுக் கொள்கைகளை அனுமதிக்கும் என்பதே எதிர்பாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது. வாக்கெடுப்புக்கு முன்னதாகவும் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


