லியு ஷியாவ்போவின் மரணத்திற்கு மலாலா கண்டனம்!

Thursday, July 20th, 2017

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த சீனாவின் மனித உரிமை செயற்பாட்டாளர் லியு ஷியாவ்போவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு சீனா அனுமதிக்காமை தொடர்பில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஆபிரிக்காவில் காணப்படும் கல்வி சிக்கல்களை தீர்க்கும் வகையில் நைஜீரியாவிற்கு விஜயம் செய்துள்ள மலாலா அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மனித உரிமை செயற்பாட்டாளரான லியு தனது 61 ஆவது வயதில் அண்மையில் காலமானார்.

லியுவின் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் பல உறுப்புகள் முற்றிலும் செயல் இழந்ததால் அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சிகிச்சைக்காக லியு வெளிநாடு செல்வதற்கு சீனாவினால் அனுமதிக்கப்படாத நிலையிலேயே உயிரிழந்ததாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

Related posts: