வன்முறை ஏற்படலாம் என இந்திய உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Saturday, November 19th, 2016

நாட்டில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அரசு திரும்பப் பெற்றிருப்பதன் விளைவாக, வன்முறைகள் ஏற்படலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பொது மக்கள் வழக்குகள் தொடுப்பதற்கு தடை விதிக்க அரசு நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், மக்கள் சிலர் தீவிரமாக இருப்பதாகவும், இந்த முடிவு, பொதுமக்களுக்கு துன்பத்தை விளைவித்திருப்பதாகவும், அந்த அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி அரசின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

பற்றாக்குறையாக இருக்கும் புதிய, சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுக்களை வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ள இந்தியர்கள் பலர், ஒரு நாளில் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதை மறுத்திருக்கும் அரசு, இரண்டாயிரத்திற்கு அதிகமான பெட்ரோல் நிலையங்களில் பணம் வழங்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறது.

வியாழக்கிழமைக்குள் பழைய அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செலவழித்திருக்க வேண்டும். ஆனால், இத்தகைய நோட்டுக்களை செலவழிப்பது மிக முக்கிய பணபரிவர்த்தனைக்கு மட்டுமானதாக ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

_92507961_92450cae-8df3-43ba-962c-031c15ad0700

Related posts: