அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக்கும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
Thursday, January 5th, 2023
அறிவியல் துறையில் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும், அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் 108வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய அவர், “புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான சூழலின் அடிப்படையில் உலகளவில் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாகவும்,
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் ஏழே ஆண்டுகளில் 81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எரிபொருள் விலை அதிகரிப்பு ; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம...
மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் - புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - அமெரிக்...
|
|
|


