எரிபொருள் விலை அதிகரிப்பு ; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Wednesday, June 23rd, 2021

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாது பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விடயத்துடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மண்ணெண்ணெய்க்கு 7 ரூபா வரை நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாவாக அதிகரிப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்காக அதனை 70 ரூபாவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான இறுதி தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 16 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு – சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்...
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்தினர்...
இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் - அமெரிக்காவின் தேசிய ...

யாழ் தேவியை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா - பிரபா கணேசன்...
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண...
இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்டது திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசி...