உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்தினர் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2024

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே இராணுவம் இவ்வாறு விடுவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்திருந்தார்.

மேலும் வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள  காணி விடுவிப்பு தொடர்பிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் உயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு முடிந்த வரையில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.

அதனடிப்படையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிக்கவோ, அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை ஜனாதிபதி காட்டுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதையடுத்து யாழ்ப்பாணம் வலி. வடக்கில் முப்படைகளின் வசம் உள்ள காணிகளை  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிலையிலேயே யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தொழில் துறைகளை ஊக்குவித்து மக்களுக்கான பொருளாதார வளங்களை பலப்படுத்தவேண்டும் - ஈ.பி.டி.பியின் தவிசாளர...
காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம் - ஜனாதிபதியின் மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே ...
நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு - ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவி...