கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை: வடகொரியாவிற்கு ஐ.நா கடும் கண்டனம்!

ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மறுபக்கம் உலக நாடுகளின் எதிர்ப்பு என சவாலான சூழ்நிலையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சர்வதேச ஒப்பந்தங்களுக்கு மாறாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்துகிறது.
3 முறை அணுக்குண்டுகளை வெடித்து சோதித்துள்ள அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் அணுக்குண்டை விட பல மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியுள்ளதாக அறிவித்து, உலக அரங்கை அதிரவைத்தது.
அதைத் தொடர்ந்து ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனாலும் வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. தொடர்ந்து கண்டம் கண்டம் விட்டு பாயக்கூடிய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நீர்முழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டியது.
இந்த நிலையில், வடகொரியாவின் செயலுக்கு கடும் ஐக்கிய நாடுகள் அவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநாவில் உள்ள 15 உறுப்புநாடுகளுடன் ஒப்புதல் பெற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிகையில், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 4 முறை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியிருப்பதாகவும் இது மிகப்பெரிய விதிமீறல் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
Related posts:
|
|