100 நாட்களில் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகளை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப்!

Tuesday, November 22nd, 2016

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நூறு நாட்களில் தான் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகள் எவை என்று டொனால்ட் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

பசிபிக் விளிம்பு நாடுகளிடையே போடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கிழித்து போடுவது தான் தனது முதல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், 12 ஆசிய நாடுகளுடன் செய்யப்படவுள்ள இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு பல பணியிடங்களையும், தொழிற்சாலைகளையும் மீண்டும் கொண்டு வரும் என்று டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.

ஆனால், இது குறித்துசெய்தியாளர்கள் கூறுகையில், டிரம்ப் மேற்கொள்ள உத்தேசித்துள்ள இந்நடவடிக்கை, இப்பகுதியில் அமெரிக்காவின் செல்வாக்கு நலிவடைய செய்யும் என்றும் இப்பகுதியில் சீனா, அதன் வணிக ஒப்பந்தங்களின் மூலம் நுழைய இது அனுமதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

donald-trump

Related posts: