அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி வெளியேறியதையடுத்து இராணுவப் பயிற்சிக்கு தயாராகியது சீனா!

Thursday, August 4th, 2022

அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானை விட்டு வெளியேறியதை அடுத்து, சீனா இராணுவ பயிற்சிகளுக்கு தயாராகி வருகின்றது.

தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வாறு இராணுவ நடவடிக்கைகளை சீனா ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

25 ஆண்டுகளுக்கு பின்னர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்ட சிரேஷ்ட அமெரிக்க அரசியல்வாதியான அவர், தாய்வானின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்ததன் பின்னர் நேற்று அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

இந்தநிலையில், அங்கு உரையாற்றிய, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தாய்வானின் ஜனநாயகத்திற்கு ஆதரவு தருவதில் தமது நாடு உறுதியான ஈடுபாட்டுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் மீது அமெரிக்கா நீண்ட காலம் கொண்டுள்ள கொள்கையில் தமது பயணம், எந்தவிதத்திலும் முரண்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்ட தாய்வான், சவால்களை சந்தித்தபோதிலும், அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் கொண்டு கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்சி பெலோசியின் நீண்ட ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தினை சீனா கடுமையாக விமர்சித்ததுடன், இவ்வாறு இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: