இத்தாலிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 247 ஆக அதிகரிப்பு!

Thursday, August 25th, 2016

நேற்று மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி வருகின்றனர். மீட்புப்பணி நடைபெறும் இடங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளான அம்பிரியா , லசியோ மற்றும் மார்ஷ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தன்னர்வ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தாலிய செஞ்சிலுவை அமைப்பு 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடிழந்தவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோம் நகருக்கு வட கிழக்கே, 100 கி.மீ. தொலைவில் புதன்கிழமையன்று அதிகாலை 3.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

160824133941_italy_earthquake_976x976_ap

160824224323_italy_640x360_epa_nocredit

Related posts: