பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் இராஜினாமா!

Thursday, June 28th, 2018

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு ஓய்வு பெற்ற நீதிபதி நசிருல் முல்க் இடைக்கால பிரதமராக பதவி ஏற்று நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜன்ஜூவா திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை இடைக்கால பிரதமர் நீதிபதி நசிருல் முல்க் உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த சர்தாஜ் அஜிஸ் மாற்றப்பட்டு அவரது இடத்துக்கு நாசர் ஜன்ஜூவா 2015ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இவர் மேஜர் ஜெனரல் மெகமூது துரானிக்கு பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு வந்த 2 ஆவது இராணுவ உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ராஜாங்க மந்திரிக்கான அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது அவர் திடீரென பதவி விலகி இருப்பதற்கான காரணம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் இடைக்கால பிரதமர் நீதிபதி நசிருல் முல்க்குடன் ஏற்பட்ட மோதல் போக்கால்தான் நாசர் ஜன்ஜூவா பதவி விலகி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: