கட்டுப்பாடுகளை எளிதாக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!

Monday, April 20th, 2020

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஐரோப்பாவில் பல நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பல தமது கட்டுப்பாடுகளை எளிதாக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஜேர்மனியில் சிறிய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் கட்டம் கட்டமாக பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் கடந்த வாரம் முதல் பெர்லினில் தொற்று பரவுவது குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றுமுதல் போலாந்தில் பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன. நோர்வேயில் முன்பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் செக் குடியரசு, திறந்தவெளி சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதுடன் அல்பேனியாவில் சுரங்க மற்றும் எண்ணெய் தொழிற்துறைகள் மீண்டும் செயல்படவுள்ளன.

எனினும் ஐரோப்பியாவில் கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஸ்பெயின் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமது கட்டுப்பாடுகளை தொடர்ந்து முன்னெப்படுதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: