புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் ஆரம்பம்!

Wednesday, July 6th, 2016

பிரித்தானியாவின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பை ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி நேற்று (5) ஆரம்பித்துள்ளது.

மூன்று கட்டங்களாக இடம்பெறும் வாக்கெடுப்பில், கன்சர்வேடிவ் கட்சியின் 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இறுதி இரு வேட்பாளர்களை தெரிவு செய்வார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிப்பது குறித்த கடந்த மாதம் 23ஆம் திகதி அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ள நிலையில், பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

அவருக்கு பதிலாக புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவை கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சிக் கூட்டத்தில் குறித்த இரு வேட்பாளருக்கும் இடையில் போட்டி நடைபெறும். இதில் அதிக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுபவர் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரித்தானியாவின் அடுத்த பிரதமரா தெரிவு செய்வதற்கு உள்துறை அமைச்சர் தெரசா மேவுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவருக்கு அடுத்தபடியாக எரிசக்தித் துறை அமைச்சர் ஆண்ட்ரியா லெட்ஸமு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: