கட்சித் தலைவராக ராகுல் காந்தி கடமைகளை பொறுப்பேற்றார்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
புதுடில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்
கடந்த 19 வருடங்களாக கட்சியின் தலைவர் பதவியை வகித்த சோனியா காந்தி உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய, கட்சியின் துணைத்தலைவராக செயற்பட்ட ராகுல் காந்தி போட்டியின்றி கட்சியின் தலைமை பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய தடை விதித்தது மலேசியா
மற்றுமொரு பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி கைது!
43,962 வெளிநாட்டவர் மலேசியாவில் கைது: நாடு கடத்த நடவடிக்கை!
|
|