43,962 வெளிநாட்டவர் மலேசியாவில் கைது: நாடு கடத்த நடவடிக்கை!

Thursday, November 29th, 2018

மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு, அது தொடர்பாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் 43,962 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளது.

சட்டவிரோதமாக பணியாற்றி வரும் வெளிநாட்டினரை கைது செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு நாளும் நடப்பதாக கூறியுள்ள குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி, நவம்பர் 27ஆம் திகதி நடந்த தேடுதல் வேட்டையில் 43 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த 43 பேர்களில், இந்தோனேசியர்கள் 20 பேர், பங்களாதேசிகள் 12 பேர், 7 இந்தியர்கள், 2 மியான்மரிகள், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் தாய்லாந்து சேர்ந்த ஒரு பெண்ணும் உள்ளடங்குவர்.

முறையான ஆவணங்கள் இல்லாமை, அனுமதி காலத்தை கடந்து தங்கியுள்ளமை, அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளை வைத்துள்ளமை உள்பட குடிவரவுச் சட்டத்தை மீறிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அவரவர் நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். இதில் பல இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts: