கடந்த ஒரு மாதத்தில் டெங்கு நோயால் 133 பேர் உயிரிழப்பு!
Friday, February 1st, 2019
இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 13 ஆயிரத்து 683 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட தற்போது 3 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு!
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம் - ஜனாதிபதி ஆணையகத்திடம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ...
புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்...
|
|
|


