ஐ.நா.வுக்கு வடகொரியா பதிலடி!

Saturday, December 3rd, 2016

புதிய பொருளாதார தடை விதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா பீரங்கி வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

இதையடுத்து அந்த நாட்டின் மீதான பொருளாதார தடையை மேலும் கடுமையாக்குவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது.இந்தத் தீர்மானம் தொடர்பாக, கவுன்சிலின் உறுப்பு நாடான சீனாவுடன் கடந்த 3 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இந்தத் தீர்மானம் 15-0 என்ற வாக்குகள் அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனைத்து அணு ஆயுத திட்டங்களையும் வடகொரியா கைவிட வேண்டும் என இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. மேலும் அந்நாட்டின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரி ஏற்றுமதிக்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய பொருளாதார தடை விதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா பீரங்கி வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியை மேற்கொண்டது.வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் உள்ளிட்ட கட்சியின் அதிகாரிகள் பீரங்கி அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: