அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் மோடி!
Monday, June 26th, 2017
மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமெரிக்காவின் வொஷிங்டன் விமான நிலையத்தை பிரதமர் மோடி அடைந்தபோது அமெரிக்க வாழ் இந்திய மக்கள் ‘பிரதமர் நரேந்திர மோடி’ என்ற நாமத்தை உச்சரித்து குரல் எழுப்பி உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.இந் நிலையில் நாளைய தினம் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இப் பயணத்தின் முதற் கட்டமாக போர்த்துக்கல் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு அமெரிக்க விஜயத்தை தொடர்ந்து நெதர்லாந்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவு...
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
|
|
|


