ஒக்ரோபரில் இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு !
Tuesday, August 18th, 2020
இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாநாடு ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது இராணுவ தளவாடங்கள் மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆகிய விடயங்கள் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஜப்பானிய நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளை இந்தியாவில் அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈஜிப்ட்ஏர் விமான சிதிலங்களும் பயணிகளின் சடலங்களும் கண்டெடுப்பு!
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் - புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் - பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


