ஈஜிப்ட்ஏர் விமான சிதிலங்களும் பயணிகளின் சடலங்களும் கண்டெடுப்பு!

Saturday, May 21st, 2016

காணாமல்போன ஈஜிப்ட் எயார் லைன்ஸ் விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படுகின்ற பொருட்கள் மெடிடரேனியன் கடற்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

எகிப்தின் கடலோப் பகுதியான எலக்ஸன்றியாவிலிருந்து 290 கிலோ மீற்றர் தூரத்தில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளின் உடமைகளும் இதில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எகிப்திய விமானம் நடுவானில் வைத்து நேற்று வியாழக்கிழமை காணாமல்போனது.

இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 ஊழியர்களும் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈஜிப்ட் ஏயார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எஸ். 804 ரக விமானமே இவ்வாறு ராடர் கருவியின் தொடர்பை இழந்து காணாமல்போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து எகிப்து அரசாங்கத்துடன் இணைந்து ஐரோப்பிய நாடுகள் இந்த விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: