சுதந்திரம் வேண்டி ஸ்பெய்னில் மக்கள் பேரணி!

Monday, August 14th, 2017

வடக்கு ஸ்பெய்னில் அமைந்துள்ள கதலோனியாவில் (Catalonia) சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரி ஸ்பெய்னில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஸ்பெய்னின் வடக்கு கரையோர பசுமை நகரான சான் செபாஸ்டியன் நகர வீதிகளில் சுமார் 3000 ஆயிரம் பேர் ஒன்றுகூடி பேரணியை நடத்தியுள்ளனர்.

ஸ்பெய்னில் இருந்து சுதந்திரம் கோரும் கதலோனியாவின் சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேரணி இடம்பெற்றுள்ளது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கொடியை தாங்கியவாறு கதலோனியாவின் சுதந்திரத்திற்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

ஸ்பெய்னிலிருந்து பல ஆண்டுகளாக சுதந்திரத்தை நாடும் கதலோனியா மத்திய அரசாங்கத்தின் பலத்த எதிர்ப்புக்களையும் மீறி கடந்த 2014 ஆம் ஆண்டு சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பை நடத்தியது. வாக்கெடுப்பில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சுதந்திரம் வேண்டி வாக்களித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று தெரிவித்து கதலோனியாவின் சுதந்திரத்திற்கு மட்ரிட்டும் கடும் எதிர்ப்பை காட்டியது.

இவ்வாறிருக்க கதலோனிய பிராந்திய அரசாங்கம் விடுதலைக்காக மீண்டும் முயற்சித்தது. அதன்போது 7.5 மில்லியன் பிராந்திய மக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த முயற்சி தோல்யிடைந்தது.

இவ்வாறிருக்க பிராந்திய அரசாங்கத்தின் தற்போதைய கருத்துக் கணிப்பின் பிரகாரம் 48.5 சதவீதமானோர் கதலோனியாவின் சுதந்திரத்தை எதிர்த்தும் 44.3 சதவீதமானோர் ஆதரவாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Related posts: