10 ரூபாய்க்கு சாப்பாடு: 1 ரூபாய்க்கு மருத்துவப் பரிசோதனை – சிவசேனை!

Sunday, October 13th, 2019


மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு, 1 ரூபாய் செலவில் 200 வகையான நோய்களுக்குப் பரிசோதனை உள்ளிட்ட வாக்குறுதிகள் சிவசேனை கட்சியின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும் மும்பையின் ஆரே பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவது குறித்து தோ்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மகாராஷ்டிரத்தில் 288 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் திகதி தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை கட்சி 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தோ்தலுக்காக பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொண்ட அறிக்கையை, மும்பையில் சிவசேனைக் கட்சித் தலைவார் உத்தவ் தாக்கரேவும், அவரது மகனும், யுவசேனை அமைப்பின் தலைவருமான ஆதித்யா தாக்கரேவும் சனிக்கிழமை வெளியிட்டனார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலம் முழுவதும் 1,000 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும். அந்த உணவகங்களில் ரூ.10 க்கு முழுச் சாப்பாடு வழங்கப்படும். அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாநிலம் முழுவதும் டுஒரு ரூபாய் கிளினிக்குகள்டு தொடங்கப்படும். அங்கு 200 வகையான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்படும். வீட்டு உபயோகத்துக்கான மின்சாரக் கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். கடன் பிரச்சனையில் இருந்து விவசாயிகள் மீட்கப்படுவர் என்று அந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Related posts: