ஒக்கி’ சூறாவளி : கடற்தொழிலாளர்களில் 18 பேரின் உடலங்கள் மீட்பு!

ஒக்கி’ சூறாவளியின் காரணமாக காணாமல் போன தமிழக கடற்தொழிலாளர்களில் 18 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
கேரள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலேயே அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனஅத்துடன், பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக கடற்தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 124 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்
காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் தமிழக மற்றும் கேரள அரசாங்கங்கள் முனைப்புடன் செயல்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்காள விரிக்குடாவில் உருவான ஒக்கி சூறாவளி கடந்த 30ம் திகதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது.
இதன்மூலம் 967 வீடுகள் சேதமடைந்ததுடன், 3 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் மின்சாரம் விநியோகங்கள் முற்றாக தடைப்பட்டன.
Related posts:
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு :சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்!
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி
இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணி - அமெரிக்கா அறிவிப்ப...
|
|