ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்: இரத்தம் வழிந்த நிலையில் மெஸ்ஸி !
Thursday, October 26th, 2017
ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
அதில், நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கம்பிகளுக்கு பின்னால் நிற்பது போலவும், அவரின் கண்ணில் ரத்தம் வழிவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு போஸ்டரில் தீவிரவாதி ஒருவன் கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு நிற்கிறான், அவனருகில் வெடிகுண்டு உள்ளது, அவன் முன்னால் கால்பந்து மைதானம் உள்ளது.மேலும் ‘முஜாதீன்கள் உங்களை எரிக்க போகிறார்கள்.. அதுவரை காத்திருங்கள்’ என்னும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகமும் இடம்பெற்றுள்ளது.இணையதளத்தில் அடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த போஸ்டர்களினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

Related posts:
குற்றவாளியை தண்டிக்க சாதாரண மனிதருக்கு உரிமை உண்டு - ஹரியானா பொலிஸ் அதிரடி கருத்து?
யூரோ கிண்ணம்: அரை இறுதிக்கு சென்றது பிரான்ஸ்!
பதிலடி தருவோம்: சனத் ஜெயசூர்யா !
|
|
|


