ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கை ஆரம்பம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான பணித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பிரதமர் தெரசா மேயின் திட்டங்களைத் தாமதமின்றி அமுலுக்குக் கொண்டுவருவதற்கு இணக்கம் காணப்பட்டது. பிரதமர் மேக்கு அது குறிப்பிடத்தகுந்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில், அரசாங்கம் அதன் பணித்திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரினர்.
அந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டனின் வெளியேற்றம் குறித்த அதிகாரபூர்வ பேச்சு ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் அதற்கான உத்தியோகபூர்வ திட்டங்களை வரையறுப்பர் என்று கூறப்பட்டது.
Related posts:
சுமத்ரா தீவில் நிலநடுக்கம்!
முஸ்லிம் குடும்பத்தில் கிறிஸ்துவ சிறுமி: நீதிமன்றம் ஆணை!
கடல்நீர் மட்டம் 2100-ஆம் ஆண்டுக்குள் 25 செ.மீ. உயரும்- ஆய்வில் எச்சரிக்கை!
|
|