ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை அதிகரித்தது வடகொரியா!
Thursday, March 25th, 2021
வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது.
வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் சுகா யோஷிஹைட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் கீழ் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பதற்றத்தைத் தூண்டுவதாகவும், வட கொரியா கொள்கையை இறுதி செய்யும் பைடன் நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!
கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா- பிரான்சில் நேற்றைய நாளில் 2,886 பேர் பலி!
தேவாலயத்தினுள் சரமாரி தாக்குதல் – பிரான்ஸ் மற்றொரு தாக்குதல் சம்பவம்!
|
|
|


